ஆடி மாத ராசி பலன்கள் - மகரம்

வெள்ளை மனம் கொண்ட நீங்கள், சில நேரங்களில் வெகுளித்தனமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 18ந் தேதி முதல் 8ல் மறைந்தாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு
குறையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 6ல் புதன் நிற்பதால் சேமிப்புகள் கரையும். 30ந் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் ஓரளவு நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். சூரியன் 7ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஈகோ பிரச்னையால் கணவன் மனைவிக்குள் மோதல்கள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குருபகவான் 6ல் மறைந்திருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். கேது சுக ஸ்தானத்தில் நிற்பதால் நேரம் தவறி சாப்பிட வேண்டியது வரும். எதிர்காலத்தை நினைத்து ஒருவித பயம் வந்து நீங்கும். தாயாருடன் வாக்குவாதம் வேண்டாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் உங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு பிறகு உங்களை கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! பதவியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். சகாக்களின் ஒத்துழைப்பு குறையும். மாணவர்களே! அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். கணிதம், இந்தி பாடத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் 30ந் தேதி முதல் பற்றுவரவு கணிசமாக உயரும். சந்தை நிலவரத்திற்கேற்ப சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் ஓரளவு குறையும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். கமிஷன், எண்ணெய், கட்டிட உதிரி பாகங் களால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! நிலப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் மகசூல் பெருகும். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 17, 19, 20, 25, 26, 27, 28, ஆகஸ்ட் 4, 5, 6, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10ந் தேதி காலை 7:30 மணி வரை தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆவூர் எனும் தலத்திற்கு சென்று வாருங்கள். கோ பூஜை செய்யுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment