
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால், செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின்போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். கட்சித் தலைமையிடம் உங்களுக்கு உள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்காலத்தைபற்றி கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்கான அனைத்து முயற்சிகளும் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்:
9, 10 ஆகிய தேதிகளில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்துப் போட வேண்டாம்.
பரிகாரம்:
புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் ஒன்பது முறை கூறவும்.
சிறப்புப் பரிகாரம்:
மரிக்கொழுந்து வாங்கி அம்மனுக்கு சாத்தவும். முடிந்தவர்கள் பச்சை நிறத்தில் பட்டும் வாங்கி சாத்தலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: வியாழன், வெள்ளி;
தேய்பிறை: வியாழன், வெள்ளி..
0 comments:
Post a Comment