
வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனத்தோடு படியுங்கள். அதிகாலையில் எழுந்து ஹயக்ரீவரை வணங்கி, படிக்கத் தொடங்குங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
11, 12, 13 ஆகிய தேதிகளில் தொழில் நிமித்தமாக யாருக்கும் முன்பணம் கொடுக்க வேண்டாம்.
பரிகாரம்:
சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் ஸ்ரீ ஹரிஹரபுத்ராய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி;
தேய்பிறை: புதன், வியாழன்..
0 comments:
Post a Comment