ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - மகரம்


அனைவரும் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். இந்த மாதம் ராசிக்கு ஏழாம் இடத்தில் புதனின் சஞ்சாரம் தொடங்குவதாலும் சூரியன், புதன் சேர்க்கை பெற்றிருப்பதாலும் வரவுக்கு இணையாக செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை
ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். 


ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும். குழப்பவாதிகளையும் அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில்  உங்களின்  நினைவாற்றல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 
உத்யோகத்தில் கூடுதலான வேலைச் சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியின் மேலிடத்து ஆதரவு கூடுதலாகவே கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. 

சந்திராஷ்டம தினங்கள்: 

7, 8 ஆகிய தேதிகளில் யாரிடமும் தேவைக்கு அதிகமான வாக்குவாதங்கள் வேண்டாம். 

பரிகாரம்: 

அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். 

சொல்ல வேண்டிய மந்திரம்: 

சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட, துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும்.

சிறப்புப் பரிகாரம்: 

வில்வத்தளங்களை சிவனுக்கு அர்ச்சனைக்காக கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி, 
தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment