
எந்த நோய் என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று குணமடைந்து விடுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். உஷ்ண சம்பந்தமான நோய் வந்து போகும். பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.
கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:
5, 6 ஆகிய தேதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தேவாரம், திருவாசகம் படித்து வர குருவருள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
சிறப்புப் பரிகாரம்:
எலுமிச்சைச் சாறு பிழிந்து பிரதோஷ அபிஷேகத்திற்குக் கொடுக்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி.
0 comments:
Post a Comment