
உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் நிறைய வரக்கூடும். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மையைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
இதனால் உங்களைத் தேடி புதிய பதவிகள் வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும் புகழும் உயரும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாக பழகுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரத்தை ஒதுக்கிப் படிப்பது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்:
3, 4, 31 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் வெகு தூரம் சுயமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.
பரிகாரம்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தரிசித்து தீபமேற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் ஸ்ரீ ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
முருகன் கோயிலிலுள்ள நாகருக்கு நெய் தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன்,
தேய்பிறை: திங்கள், வியாழன்.
0 comments:
Post a Comment