
மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளால் உத்யோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களைப்பற்றி புறம் பேசியவர்கள் சரணடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டம தினங்கள்:
1, 2, 29, 30 போன்ற தேதிகளில் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.
பரிகாரம்:
மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபமேற்றி வழிபட எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
வெண் மொச்சை சுண்டல் செய்து சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமையன்று வழங்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி,
தேய்பிறை: திங்கள், வெள்ளி..
0 comments:
Post a Comment