ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - கன்னி


எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள். அனைத்திலும் அதீதமான கௌரவத்தை எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் உங்களின் ராசியாதிபதியான புதன் ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்வதும், சூரியனின் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை
சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் துணிவு உண்டாகும். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். 


புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக் காரியங்களில் ஈடுபட மனம் விழையும்.  சிலருக்கு ரியல் எஸ்டேட் துறையின் மூலம் ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு மிகவும் உதவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொல்லும் வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் பேச்சை உடனடியாக கேட்க வேண்டாம். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. 

உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது  கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: 

27, 28 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திட வேண்டாம். 

பரிகாரம்: 

முடிந்தவரை தினமும் பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

‘ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 23 முறை சொல்லுங்கள்.
 
சிறப்புப் பரிகாரம்: 

விநாயகப் பெருமானை அறுகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுபட, தடைப்பட்ட காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். செல்வம் சேரும்.    

அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: திங்கள், புதன், வியாழன், 
தேய்பிறை: திங்கள், புதன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment