
உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றி கொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதோடு மட்டுமல்லாமல் ஆதாயமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும் இருக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். ஆடை, ஆபரணங்கள் என்று வாங்கிக் குவிப்பீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களின் முழுமையான திறமைகள் வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களின் திறமை வெளிப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:
25, 26 ஆகிய தேதிகளில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் ஸ்ரீமஹாருத்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
விநாயகருக்கு அறுகம்புல் மாலை சார்த்தி வழிபடவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன்,
தேய்பிறை: புதன், வியாழன்..
0 comments:
Post a Comment