ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - கடகம்

அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்து மகிழும் தயாள குணம் படைத்தவர்கள் நீங்கள். இனிமையாகப் பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் ராசிக்குள் புதன், சூரியன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது யோசித்துச் செய்வது நல்லது. வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில் சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. பிறர் கேட்காமல்   அறிவுரை வழங்க வேண்டாம். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். 

நுணுக்கமான விஷயங்களையும் சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்துச் செல்லவும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். 

பெண்கள், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற மாதமிது. சமுதாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற உதவும். 

சந்திராஷ்டம தினங்கள்: 

22, 23, 24 போன்ற நாட்களில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம். 

பரிகாரம்: 

புதன் கிழமைதோறும் ஹயக்ரீவ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி, தைரியம்  பிறக்கும்.

சிறப்புப் பரிகாரம்: 

மல்லிகை மலரை அம்பாளுக்கு படைக்கவும்.  
  
அதிர்ஷ்ட கிழமைகள்: 

வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன், 
தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment