
மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் பூர்த்தியாகும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத்தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும்.
கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் திறமையைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அரசியல், சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு பரிபூரண நன்மைகள் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான காலம் இது. நிறைய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:
19, 20, 21 ஆகிய தேதிகளில் பெரிய முதலீடு எதையும் செய்ய வேண்டாம்.
பரிகாரம்:
பெருமாள் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் ஸ்ரீமாதவாய நமஹ’ என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
மரிக்கொழுந்தை பெருமாளுக்கு சாத்தி வழிபட, அவரின் அருளால் அனைத்து நன்மையும் நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்.
0 comments:
Post a Comment