
காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியனின் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் நிற்கும். கடினமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் சாதனைகளை செய்து புகழ் பெறுவீர்கள்.
தொழிலிலும் வியாபாரத்திலும் மேன்மை உண்டாகும். ஆனால், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையிலுள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சாதகமான முடிவை பெறுவார்கள்.
இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருந்தாலும் பல சோதனைகளையும் சந்திக்க வேண்டியது வரும். இருப்பினும் சூரியனின் சஞ்சாரத்தால் அனைத்தையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் கிடைக்கும். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
சந்திராஷ்டம தினங்கள்:
17, 18 ஆகிய தேதிகளில் புதிய தொழில்களுக்கான முன்பணம் எதையும் தர வேண்டாம்.
பரிகாரம்:
அருகிலுள்ள சிவாலய அம்பாளை தரிசித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற்றால் எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘ஓம் சதாசிவகுடும்பின்யை நமஹ’ என்ற மந்திரத்தை 24 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
மல்லிகை மலரை அம்பாளுக்கு சாத்தி வழிபடுங்கள். அவளின் அருட்பார்வையால் உங்களது துன்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி,
தேய்பிறை: புதன், வெள்ளி.
0 comments:
Post a Comment