ஆடி மாத ராசி பலன்கள் - தனுசு

மற்றவர்களை குறை சொல்லாது தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், ஓசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில்
சனியும் ராகுவும் நிற்பதால் புது விதமாக யோசிப்பீர்கள். புதிய பாதையும் தெரியும். வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள் மூலமாக திடீர் திருப்பம் உண்டாகும். கடந்த காலத்தில் சவாலாக நினைத்திருந்த வேலைகளெல்லாம் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் பயனடைவீர்கள். உங்கள் ராசிநாதனான குருவும், பூர்வ புண்யாதிபதி செவ்வாயும் சேர்ந்து 7ம் வீட்டில் நிற்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம் கூடி வரும். திடீர் பணவரவு உண்டு. கணவன்- மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு இடம் தேடினீர்களே! உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 8ல் மறைந்து நிற்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தந்தையாருடன் மோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். காசோலை கொடுப்பதற்கு முன்னர் வங்கி இருப்பை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்குகள் சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களே! மொழித் திறன் வளரும். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோரின் அறிவுரையில் உண்மைகள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் அலட்சியப் போக்குடன் இருந்த நீங்கள் இனி ஆர்வமாக செயல்படத் தொடங்குவீர்கள். விலகிச்சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உங்களின் புதுத் திட்டங்களுக்கு பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். கலைத்துறையினரே! புகழ் கூடும். தனித்திறமையை வெளிப் படுத்துவீர்கள். விவசாயிகளே! நீண்ட கால பயிர்களால் லாபமடைவீர்கள். வங்கிக்கடனின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 17, 24, 26, ஆகஸ்ட் 1, 2, 3, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 5ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்: சென்னை-மயிலாப்பூர் ஷீரடி பாபா கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment