ஆடி மாத ராசி பலன்கள் - விருச்சிகம்

வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கும், நீங்கள், வருங்காலத்தைப்பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவானும் தன-பூர்வ புண்யாதிபதியான
குருபகவானும் 8ல் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பயணங்களும் அடுத்தடுத்து இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலத்தில் சிலருக்கு வேலை அமையும். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள குறுகியகால கோர்ஸில் சேருவீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை கிளறிக் கொண்டிருக்காதீர்கள். வழக்குகள் தாமதமாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விஐபிகளின் ஆதரவால் முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களும் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனின் உதவி தாமதமாக கிடைக்கும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு, தூக்கமின்மை வந்துபோகும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசாதீர்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். கோஷ்டிப் பூசலை ஊக்குவிக்க வேண்டாம். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்தியை கையாளுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மூலமாக புதியவர்கள் அறிமுகமாவார்கள். இருந்தாலும் பற்று வரவு மந்தமாகத்தான் இருக்கும். பெரிய முதலீடுகள் இந்த மாதத்தில் வேண்டாம். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்கள் அதிக முன் பணம் தந்து தொந்தரவு தருவார்கள். உத்தியோகத்தில் அலைச்சலும் வேலைச்சுமையும் சிறுசிறு அவமானங்களும் விரும்பத்தகாத இடமாற்றமும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள். அவர்களால் பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். ராஜ தந்திரத்தால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 21, 22, 23, 24, 25, 29, 30, ஆகஸ்ட் 2, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 3, 4 மற்றும் 5ந் தேதி நண்பகல் 12 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகேயுள்ள கதிராமங்கலம் வனதுர்க்கையை தரிசியுங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment