ஆழமாக யோசித்து, அதிரடியாக செயல்படும் குணமுடைய நீங்கள், எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிப்பீர்கள். சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். கடந்த ஒருமாத
காலமாக 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களையும் முன்கோபத்தையும் உறவினர், நண்பர்களுடன் மோதல் போக்கையும் கொடுத்து வந்த சூரியன் இப்போது 6ல் நுழைந்திருப்பதால் இங்கிதமாகப்பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் இருந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். 30ந் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல், வருத்தங்கள் வந்து நீங்கும். அவர்களுக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 11ந் தேதி வரை உங்களின் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். குருபகவான் 5ம் வீட்டிலேயே நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 5ம் வீட்டிலேயே செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உங்களின் ராசிநாதன் சனிபகவானை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பெருகும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் தேடி வரும். எதிர் கோஷ்டிக்காரர்களை ராஜதந்திரத்தால் வீழ்த்துவீர்கள். மாணவர்களே! நினைவாற்றல் கூடும். வகுப்பாசிரியர் பாராட்டுவார்கள். விளையாட்டுப் போட்டியிலும் பதக்கம் வெல்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கித் தவித்தீர்களே! உண்மையான நட்பு எது என்பதை உணர்வீர்கள். உயர்கல்வியிலும் வெற்றி உண்டு. 3ல் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடு செய்யலாம். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரக்கூடும். விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். அக்கம் பக்கம் உள்ள விவசாயிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். திடீர் திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த மாதமிது.
ராசியான தேதிகள்:ஜூலை 18, 19, 20, 21, 27, 28, 29, ஆகஸ்ட் 6, 9, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 10ந் தேதி காலை 7:30 மணி முதல் 11 மற்றும் 12ந் தேதி மதியம் 2 மணி வரை பெரிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள பெருநகர் பிரம்மபுரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

0 comments:
Post a Comment