ஆடி மாத ராசி பலன்கள் - மீனம்

வெள்ளை உள்ளமும் விடாப்பிடியான செயல்திறனும் கொண்ட நீங்கள், எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள். உங்களின் ராசிநாதனான குருபகவானும் தன-பாக்யாதிபதியான செவ்வாயும் சேர்ந்து 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும். புது முயற்சிகள் பலிதமாகும். ஒரு வீட்டு மனையை விற்றுவிட்டு மற்றொன்று வாங்க வேண்டுமென்று நினைத்தீர்களே! அதுவும் நல்ல விலைக்குப் போகும். புதுச் சொத்து வாங்குவீர்கள். குருவும் செவ்வாயும் 10ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் புது வேலைக்கு முயற்சித்தால் வெற்றி பெறுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். ஆனால், சூரியன் 5ல் நுழைந்திருப்பதால் உறவினர்களுடன் நெருடல்கள் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும் பிரச்னைகளும் செலவினங்களும் இருக்கும். சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணப் பற்றாக்குறை ஏற்படும். கடன் பிரச்னை தலைதூக்கும். ராகுவும் 8ல் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு மற்றும் கழுத்து வலி வந்துபோகும். கேது 2ம் வீட்டில் தொடர்வதால் கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் பெறாமல் வீடு கட்டத் தொடங்காதீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட்டாருடன் சண்டை, சச்சரவு வரும். வழக்குகளையும் சந்திக்க நேரிடும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை குறை கூறிப் பேச வேண்டாம். தலைமையை திருப்திபடுத்துவதற்காக பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பும் தாமதமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதுத் துறையில் இறங்காதீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் வெடிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். கலைத்துறையினரே! வீண் பழிக்கு ஆளாவீர்கள். பழைய சம்பள பாக்கியை போராடிப் பெற வேண்டியிருக்கும். விவசாயிகளே! பக்கத்து நிலக்காரரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 21, 22, 23, 30, ஆகஸ்ட் 2, 4, 5, 8, 9, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 12ந் தேதி மதியம் 2 மணி முதல் 13 மற்றும் 14ந் தேதி மாலை 6 மணி வரை முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: விருத்தாசலம் அருகேயுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை தரிசியுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment