ஆடி மாத ராசி பலன்கள் - கடகம்

கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்ட நீங்கள் காலத்திற்கேற்ப கோலத்தை மாற்றிக் கொண்டாலும் ஒழுக்கம் தவறாதவர்கள். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில
வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் துரத்திக் கொண்டே இருக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். மனைவி ஆறுதலாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான குருவும் செவ்வாயும் 12ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். பாகப்பிரிவினையில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. பழைய வழக்குகள் குறித்து வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை சந்தித்து தீர்வு தேடுவீர்கள். சமூக எதிர் நடவடிக்கைகள் உள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல் கள் வரும். நேரம் தவறி சாப்பிட வேண்டிய சூழ்நிலை வரும். அசிடிட்டி தொந்தரவால் அவதிப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே ஆர்வமாக படிக்கத் தொடங்குங்கள். வகுப்ப றையில் கடைசி வரிசையில் அமராமல் முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. நட்பு வட்டத்தில் யாரிடமும் எல்லைமீறி பழக வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத் தில் பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கடன் வாங்கி பெரிய முதலீடு செய்ய வேண்டாம். உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். இட மாற்றம் வரும். மூத்த அதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். சம்பள பாக்கியை போராடிப் பெற வேண்டியது வரும். சிலர் வேலையை விட வேண்டி யது வரும். உயரதிகாரிகளைப்பற்றி சக ஊழியர்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறு வீர்கள். விவசாயிகளே! விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். நாவடக்கமும் பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 17, 21, 22, 29, 30, ஆகஸ்ட் 1, 2, 8, 9, 10, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22ந் தேதி மாலை 6 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள பைரவரை தரிசியுங்கள். தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோரும் பானகமும் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment