ஆடி மாத ராசி பலன்கள் - சிம்மம்

 ஆரவாரத்துடன் அடுக்கு மொழியாக பேசாமல் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்பவர்களே! உங்கள் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்து சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, இளமை கூடும். துணிச்சலாக சில முடிவுகளை
எடுப்பீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வீடு, மனை விற்பது லாபகரமாக முடியும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த வெள்ளி, தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தி யில் அந்தஸ்து உயரும். உங்களின் பிரபல யோகாதிபதிகளான குருவும் செவ்வாயும் லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். பூர்வீகச் சொத் துப் பிரச்னைகள் தீரும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். இழந்த பதவிக்கு நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12ல் மறைந்து நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை சிறப்பாக முடிப்பீர்கள். சனியும் ராகுவும் 3ம் வீட்டில் தொடர்வதால் புது பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். தன் னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மேல் மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கோஷ்டிப் பூசலை தீர்ப்பீர்கள். மாணவர் களே! விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கன்னிப் பெண்களே! பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பங்குதாரர்களால் பல னடைவீர்கள். வேலையாட்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பவர் புராஜெக்ட், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்காகவும் சில சலுகை களை பெற்றுத் தருவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! மாற்றுப்ப யிர் மூலமாக மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை நீங்கும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 17, 18, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும்.

பரிகாரம்: பண்ருட்டிக்கு அருகேயுள்ள திருவதிகை தலத்தில் அருளும் சயன நரசிம்மரை தரிசியுங்கள். தந்தையை இழந்த குழந்தைக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment