ஆடி மாத ராசி பலன்கள் - ரிஷபம்

உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களை கண்டால் கோபப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்ப தால் தன, தான்ய சம்பத்து அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
செல்வாக்கு உயரும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து உதவுவார்கள். பிள்ளைகளை எதிர்பார்த்த க ல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். 3ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக் கேற்ற வீடு அமையும். உங்களின் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் ஆரோக்யம், அழகு கூடும். இந்த மாதம் முழுக்க செவ்வாய் 2ல் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். மனைவியுடன் அவ்வப்போது ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாணவர்களே! உங் களுடைய நினைவாற்றல் கூடும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டு. கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் பிரச்னை தீரும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். சனியும் ராகுவும் 6ல் நிற்பதால் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்வீர்கள். பிரபலங்களும் உங்கள் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருப்பார்கள். சிமென்ட், ஸ்டேஷனரி, ஷேர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்களால் வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர் கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்கள் உழைப்பை புரிந்து கொள்ளும் அதிகாரி வருவார்.உங்களுடைய முழுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். எதிர்பார்த்த அங்கீகாரம், இழந்த சலுகைகள், வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்திலிருந்து புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. வரப்புச் சண்டை தீரும். கடந்த கால கசப்புகள் நீங்கி, வெற்றிக் கனியை சுவைக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 17, 24, 25, 26, 27, 28, 29, 30, ஆகஸ்ட் 6, 9, 12, 13, 15

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 20ந் தேதி நண்பகல் 12:30 மணி முதல் 21 மற்றும் 22ந் தேதி மாலை 3 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் நெய்வேலி எனும் தலத்தில் அருளும் அக்னீஸ்வரரை தரிசித்துவிட்டு வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment