ஆடி மாத ராசி பலன்கள் - மேஷம்

சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம், ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் பிரபல யோகாதிபதியான குருபகவானுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த
மாதம் முழுக்க நீங்கள் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை எல் லாம் முடிப்பீர்கள். ராசிநாதன் வலுவாக காணப்படுவதால் பதவிகள் தேடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 11ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயா ரின் உடல் நிலை பாதிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரை பார்ப்பது நல்லது. ராசியிலேயே கேது நிற்பதாலும் உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கால் மற்றும் கழுத்து வலி வரும். தூக்கம் குறையும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் ஏற்படும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், 3ல் குரு நிற்பதால் உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மாணவர்களே! மறதி உண்டாகும். நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தாமதமாகும். காதல் விஷயத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும். வேலையாட்கள் மூலமாக வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால், உங்கள் ராசிநாதனான செவ்வாய் வலுவாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். விவ சாயிகளே! மாற்றுப் பயிரிடுங்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீர்வளம் கிட்டும். விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையாலும் சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 22, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 18ந் தேதி காலை 10 மணி முதல் 19, 20ந் தேதி நண்பகல் 12:30 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 14ந் தேதி மாலை 6 மணி முதல் 15, 16 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்

பரிகாரம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment