எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறவாதவர்கள். உங்களின் ராசிநாதனான சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
தொட்டதெல்லாம் பொன்னாகும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். ஒதுங்கியிருந்த, பதுங்கியிருந்த நீங்கள் இனி எல்லா விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
சூரியனுடன் புதனும் வலுவாக இருப்பதால் மூத்த சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இந்த மாதம் முழுக்க பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பீர்கள். கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று, நகரத்தில் வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும்.
சகோதர வகையில் அனுகூலம் உண்டு. சனியும் ராகுவும் 3ம் வீட்டில் நிற்பதால் பெரிய பதவிக்கு தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். தலைமையுடன் நெருக்கமாவீர்கள். மாணவர்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொது அறிவுத்திறன், மொழி அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! புதுவேலை கிடைக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிக சம்பளத்துடன் பதவி உயர்வும் தகுந்த இடமாற்றமும் கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய பெரிய வாய்ப்புகள் கூடிவரும். விருது, பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். மகசூல் இரட்டிப்பாகும். வீட்டில் நல்லது நடக்கும். எதிர்பாராத வெற்றிகளை சந்திக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூன் 18, 19, 25, 26, 27, ஜூலை 5, 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 29ந் தேதி மதியம் 2 மணி முதல் 30 மற்றும் ஜூலை 1ந்தேதி இரவு 9 மணி வரை அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.
பரிகாரம்: உத்திரமேரூருக்கு அருகேயுள்ள திருப்புலிவனம் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். முதியவர்களுக்கு செருப்பும் குடையும் தானம் செய்யுங்கள்.

0 comments:
Post a Comment