எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப் பாதையில் செல்வீர்கள். 10ம் வீட்டில் குரு அமர்ந்தாலும் உங்களின் ராசிநாதனான புதன் இந்த மாதம் முழுக்க ராசிக்கு
10ல் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எதிலுமே உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து தந்தையாருக்கு ஆரோக்ய குறைவை ஏற்படுத்திய சூரியன் 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும்.
அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் தன-பாக்யாதிபதியும் பிரபல யோகாதிபதியுமான சுக்கிரன் 10ல் அமர்ந்திருப்பதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். 3ந் தேதி வரை செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். ஆனால், 4ந் தேதி முதல் 10ல் நுழைவதால் உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
புதுவேலை கிடைக்கும். ஏழரைச்சனி நடைபெறுவதால் யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கேது 8ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஞாபக சக்தி கூடும். இருந்தாலும் ஏழரைச் சனி தொடர்வதால் கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தைத் தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த விஷயங்களிலும் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகளே! போராடித்தான் பதவியை தக்க வைத்துக் கொள்வீர்கள். தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நீங்கள் நண்பர்களாவீர்கள்.
வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். 10ல் குரு அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். இடமாற்றங்கள் வரும். சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் கூடி வரும். உங்களின் யதார்த்தமான படைப்புகள் பலராலும் பாராட்டி பேசப்படும். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். போராட்டங்களை கடந்து சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூன் 19, 21, 22, 24, 28, 29, 30, ஜூலை 1, 7, 8, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 1ந் தேதி இரவு 9 மணி முதல் 2, 3 ஆகிய தேதிகளில் மனதில் இனம் புரியாத பயம் வந்து நீங்கும்.
பரிகாரம்: கோவில்பட்டி - விளாத்திக்குளத்திற்கு அருகேயுள்ள ஜமீன் கரிசல் குளத்தில் அருளும் பகளாமுகி தேவியை தரிசியுங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.

0 comments:
Post a Comment