ஆனி மாத ராசி பலன்கள் - துலாம்

வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறு களை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பீர்கள். 3ந் தேதி வரை  செவ்வாய் 8ல் நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். சகோதர
வகையிலும் பிணக்குகள் வரும். சொத்து விஷயத்திலும் எச்சரிக்கையாக  இருங்கள். வீடு, மனை வாங்குவதாக இருந்தால் தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். 4ந் தேதி முதல் செவ்வாய் 9ல் நுழைவதால்  விபத்துகள் வந்து நீங்கும். பகையாகப் பேசி வந்த உடன்பிறப்புகள் பாசமாக பேசுவார்கள்.

குருபகவான் 9ம் வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் ஓரளவு குறையும்.  தந்தை வழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டையும் குரு பார்த்துக்  கொண்டிருப்பதால் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டிற்கு  சென்று வருவார்கள். நீங்கள் வெளிநாடு செல்லவும் விசா கிடைக்கும். பிரபல  யோகாதிபதியான புதனும் ராசிநாதனான சுக்கிரனும் 9ம் வீட்டில் நிற்பதால் பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஜென்மச் சனி  நடைபெறுவதால் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

மாணவர்களே! படிப்பில் ஆர்வம் உண்டாகும். தொடக்கத்திலேயே நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். வகுப்பாசிரியரிடம் மதிப்பும் மரியாதையும்  கூடும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு  இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப்போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும்.  பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவு படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றி  யடையும்.  ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம்  ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக  ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். மூத்த  கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! மரப் பயிர், எண்ணெய் வித்துக்களால் லாபம் வரும். வற்றிய கிணறு சுரக்கும். கடின  உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூன் 15, 21, 22, 23, 24, 26, 30, ஜூலை 1, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 4, 5 மற்றும் 6ந் தேதி மாலை 5 மணி வரை எதிலும் அவசரம் வேண்டாம்.

பரிகாரம்: வேலூருக்கு  அருகேயுள்ள பள்ளூர்  வாராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலையோரப் பணியாளர்களுக்கு பானகமும் மோரும்  கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment