ஆனி மாத ராசி பலன்கள் - விருச்சிகம்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வீர்கள். 3ந்  தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவடைந்திருப்பதால் தடைகள்
நீங்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வீடு, மனை வாங்குவது,  விற்பது நல்ல விதத்தில் முடியும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகும். நிர்வாகத் திறமையும் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில்  செல்வதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. புகழ்  பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சூரியனும், குருவும் 8ல் மறைந்திருப்பதாலும் 4ந் தேதி முதல் உங்கள் ராசிநாத னான செவ்வாயும் 8ல் மறைவதால் தவிர்க்க முடியாத  செலவினங்கள் அதிகரிக்கும்.  பிள்ளைகளாலும் அலைச்சல்கள் கூடும். அவர்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவு மற்றும் நிறுவனத்தில் செலவு செய்து  சேர்க்க வேண்டியது வரும். புதன் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பழைய நண்பர்கள் உதவுவார்கள். சமூகத்தில் பெரிய  அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஏழரைச்சனி தொடர்வதால் யாருக்கும் கேரண்டர், ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். யூரினரி  இன்பெக்ஷன், அடி வயிற்றில் வலி, காது, தொண்டை வலி வந்து நீங்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லிக் கொண்டிருக்க  வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில்  உங்கள் கவனத்தை திருப்புங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். மாணவர்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.  விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அரசுக்குச்  செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது  நல்லது. கமிஷன், ஸ்டேஷனரி, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெருகும்.

பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். சூரியன் மறைந்திருப்பதால்  அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட
வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! பம்பு செட் பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரருடன் பகைமை வேண்டாம். மரப்பயிர்கள்  லாபம் தரும். சிக்கனமும் நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.  

ராசியான தேதிகள்: ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26, ஜூலை 4, 5, 6, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 6ந் தேதி மாலை 5 மணி முதல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

பரிகாரம்: கும்பகோணம், நன்னிலத்திற்கு அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் அருளும் எமதர்மனையும் சித்திர குப்தனையும் தரிசியுங்கள். சுமை தூக்கும்  தொழிலாளிக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment