ஆனி மாத ராசி பலன்கள் - தனுசு

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உங்களின்  ராசிநாதனான குரு பகவான் 7ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை  வரத் தொடங்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் சிலர்  புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். சொத்து, பாகப் பிரிவினை  பிரச்னைகள் தீரும். பூர்வீகச் சொத்து வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். சூரியன் 7ம் வீட்டில் நிற்பதால்  உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து செல்லும். 5ல் கேது நிற்பதால் மகளின் திருமணத்திற்காக   கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக அலைந்து, சிலரின் சிபாரிசை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப்  பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்ள வேண்டாம்.

சனியும் ராகுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு  செல்ல விசா கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுவேலை கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றி குறை கூற வேண்டாம். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். மாணவர்களே!  மதிப்பெண் உயரும். நினைவாற்றல் கூடும். ஆசிரியரின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்  செய்வீர்கள்.  புது வேலையாட்களையும் சேர்ப்பீர்கள்.

பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். ரியல் எஸ்டேட், பெட்ரோ- கெமிக்கல், மர வகைகளால்  லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள்  கருத்திற்கு ஆதரவு பெருகும். சம்பளபாக்கி கைக்கு வரும். சிலர் அலுவலகம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கலைத்துறையினரே! பழைய  நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகள் தீரும். புதிதாக  ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூன் 17, 18, 19, 20, 26, 27, 29, ஜூலை 4, 5, 6, 8, 14, 15,16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 9, 10 மற்றும் 11ந் தேதி மதியம் 2:30 மணி வரை முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்: திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மயிலம் முருகனை தரிசியுங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு  உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment