ஆனி மாத ராசி பலன்கள் - கடகம்

தடைகளை கண்டு தளராமல் போராடும் குணம் கொண்ட நீங்கள், கடின உழைப்பாளிகள். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 12ல்  அமர்ந்திருப்பதால் கொஞ்சம் அலைச்சல்களும் செலவுகளும் இருக்கும். திடீர்
பயணங்களும் அதிகரிக்கும். ஊர் பொதுக் காரியங்களை எல்லாம்  முன்னின்று நடத்தி நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களின் தனாதிபதியான சூரியன் 12ல் மறைந்திருப்பதால் எதிர்பாராத செலவுகள் இருக்கும்.  எதிர்பார்த்த வகையில் பணம் தாமதமாகதான் வரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும்  சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். புதன் 12ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் மீடியேட்டர், புரோக்கரேஜ் மூலமாக வருமானம் வரும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ந் தேதி வரை லாப வீட்டில் நிற்பதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். பழைய சொத்துப்  பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். 4ந் தேதி முதல் செவ்வாய் 12ம் வீட்டில் மறைவதால் உடன் பிறந்தவர்கள்  கோபப்படுவார்கள். 4ம் வீட்டிலேயே சனியும் ராகுவும் நிற்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். அடுத்தவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை  நுழைக்காதீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். மாணவர்களே! கல்விப் பிரிவில் தேர்ந்தெடுப்பதில்  பெற்றோர், நண்பர்களை கலந்தாலோசிப்பது நல்லது. கன்னிப் பெண்களே! நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.

உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் 3ந் தேதி வரை வழக்கமான லாபம் உண்டு. 4ந் தேதி முதல் போட்டிகளால் லாபம் குறையும்.  அரசுக்கு செலுத்த  வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பங்குதாரர்கள், வேலையாட்களால் ஏமாற்றங்களும் அலைக்கழிப்புகளும் இருக்கும்.  மாற்றுத் திறனாளிகளை வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  உங்கள் ராசிக்கு 10ல் கேது நிற்பதால் உத்யோகத்தில் அதிகம் உழைக்க வேண்டியது  வரும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களிடம் ஒப்படைப்பார்.

உங்களின் நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார். ஆனால், மேல்மட்டத்திலிருக்கும் மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.  கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். விவசாயிகளே! மரப் பயிர்கள், கரும்பு,  வெண்டைக் காய், கீரை வகைகளால் லாபம் வரும். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.  

ராசியான தேதிகள்: ஜூன் 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, ஜூலை 2, 3, 5, 6, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 27ந் தேதி காலை 9:30 மணி முதல் 28 மற்றும் 29ந் தேதி மதியம் 2 மணிவரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது  நல்லது.

பரிகாரம்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாளை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment