போராட்டங்களும், புரட்சி கரமான சிந்தனைகளும் உடைய நீங்கள், தன்னைப்போல் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென நினைப்பீர்கள். இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான
வீடுகளில் செல்வதால் திட்டமிட்ட காரியங்களை நல்ல விதத்தில் முடித்துக் காட்டுவீர்கள். கால், கழுத்து, முதுகு வலி விலகும். சகோதர வகையில் இருந்த பிரச்னைகள், மனத்தாங்கல் நீங்கி நிம்மதியான சூழ்நிலை உருவாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உங்களுடைய பூர்வ புண்யாதிபதியான சூரியன் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் ஒருபடி அந்தஸ்து உயரும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள்.
குழந்தை பாக்யம் சிலருக்கு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து உதவுவார்கள். உங்கள் ராசியிலேயே கேது நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல், மனக்குழப்பம், முன்கோபம் வரும். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடாதீர்கள். உங்களின் பிரபல யோகாதி பதியான குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பணம் வாங்கித் தருவதிலும் கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம்.
கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்- மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். 7ம் வீட்டிலேயே ராகுவும் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அதிசயிக்கும்படி சிலவற்றை செய்வீர்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே பாடத்தில் கவனம் செலுத்துங்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். நினைவாற்றல் கூடும். கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
காதல் விவகாரங்களில் இருந்த குழப்பம் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களால் அவ்வப்போது பிரச்னைகள் வரும் என்றாலும் ஒத்துழைப்பார்கள். கமிஷன், புரோக்கரேஜ், காஸ்மெட்டிக்ஸ் வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூன் 16, 17, 19, 26, 27, 28 ஜூலை 5, 6, 8, 13, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயரை வணங்குங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.

0 comments:
Post a Comment