செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். பேச்சிலே கம்பீரம் பிறக்கும். யதார்த்தமாகவும் இங்கிதமாகவும் பேசி சில காரியங்களை இந்த மாதத்தில் சாதிப்பீர்கள். 3ந் தேதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் கொஞ்சம் உடல் உஷ்ணம் அதிகமாகும். லேசாக அடிவயிற்றில் வலி வந்துபோகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே உணவில் உப்பையும் சர்க்கரையையும் குறைத்துக் கொள்ளுங்கள். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உங்களின் தன, பூர்வ, புண்யாதிபதியான புதன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளை பாக்யம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தாய்வழி உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 2ல் சூரியன் நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கண்வலி வரக்கூடும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் கேது மறைந்திருப்பதால் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். முகம் மலரும்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்பு களை தலைமை தரும். மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப் பிரிவில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும். கன்னிப் பெண்களே! நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். காதல் கனியும். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமருவீர்கள். சனியும், ராகுவும் 6ம் வீட்டில் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேற்று மதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும். மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களைப்பற்றி மூத்த அதிகாரிகளிடம் குறைகூற வேண்டாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நீங்களே நேரடிப் பார்வையில் செய்து முடிப்பது நல்லது. கலைத்துறையினரே! இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூன் 15, 19, 20, 21, 22, 27, 28, 29, 30, ஜூலை 1, 2, 3, 5, 10, 11, 13.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: திருவள்ளூருக்கு அருகேயுள்ள சோளிங்கர் யோக நரசிம்மரை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

0 comments:
Post a Comment