ஜூன் மாத ராசி பலன்கள் - மீனம்

எந்தவொரு பிரச்னையையும் சமாதானமாகப் பேசி முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் உடல் ஆரோக்யமும் மன  வலிமையும் கூடும்.  உங்கள் ராசியாதிபதி குரு தற்போது ராசிக்கு 4ல் இருந்து பல
லாபங்களை தருகிறார். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள்  ஒவ்வொன்றாக மாறும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை  முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு. தம்பதியரிடையே அன்பும் அதிகரிக்கும்.

சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று  சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில்  தொடங்கலாம். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்னை முடிவுக்கு வரும். ஜாதகத்தில் தசா புக்திகள்  அனுகூலமற்றிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.

எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் நாலாமிடத்தில் உலவுவதால் உடன் பிறந்தவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியது வரலாம். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பணப் புழக்கம் கடந்த காலத்தைவிட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு மாதத்தின் முற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக  இருக்கும். பிறரை விமர்சிக்கும் போது உங்களிடம் ஆதாரம்மில்லாத குற்றசாட்டுகளை முன் வைக்காதீர்கள். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துப்  படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும்.அசைவ உணவுகளை தவிர்கவும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று குருபகவானை வணங்கி விட்டு வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீகுருவே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம்: முழுக் கடலை வாங்கி மாலை கட்டி தட்சிணாமூர்த்திக்கு சாத்தி வழிபடவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் வேண்டாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், குரு, சுக்கிரன்; தேய்பிறை: புதன், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment