2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எங்கும், எதிலும் வெற்றி கிட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன வசதிப் பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி தொடரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள்.
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஆனால் மறைமுக எதிர்ப்பு, கனவுத் தொல்லை, திடீர் பயணங்கள், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினர்களே! தீவிரமாகப் பேசி சம்பள பாக்கிகளை வசூலிப்பீர்கள். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 7, 16, 15, 25
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, பிங்க்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்
0 comments:
Post a Comment