1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவு, உதவிகள் கிட்டும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.
மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அவ்வப்போது கண், பல் வலி, நெஞ்சு எரிச்சல், முன்கோபம் வந்து விலகும்.
பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து டென்ஷன் அதிகரிக்கும். சொத்து பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்கள் மனம் விட்டு பேசுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5, 10, 18
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், சில்வர்கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்
0 comments:
Post a Comment