ஜூ‌லை மாத ஜோதிடம் : 3, 12, 21, 30


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.


இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பழைய வீட்டை விற்று புது இடம் வாங்குவீர்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு.

பிற்பகுதியில் வீண் சந்தேகம், இனந்தெரியாத கவலைகள், தலைச்சுற்றல் வந்து நீங்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 3, 9, 21, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, இளம்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment