4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பெரிய திட்டங்கள் எல்லாம் சாதாரணமாக நிறைவேறும். அரசியலில் செல்வாக்குக் கூடும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். புது வேலைக் கிடைக்கும்.
பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தந்தையின் உடல் நலம் சீராகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாங்க கட்ட லோன் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடமிருந்து நற்பெயர் எடுப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! குழப்பங்கள் விலகும். புது எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் நிர்வாகத் திறமையை பாராட்டுவார்கள். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகளை தகர்த்தெரியும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 6, 15, 24, 26
அதிர்ஷ்ட எண்கள் : 5, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்
0 comments:
Post a Comment