2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும்.
பிள்ளைகளின் உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய சொந்தங்களை சந்திப்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.
புது வேலை அமையும். அவ்வப்போது வீண் செலவு, அலைச்சல், பேச்சால் பிரச்னை, சிறுசிறு விபத்து, திடீர் பயணங்கள் வந்துச் செல்லும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள்-. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 4, 8, 12, 15, 16, 22, 29
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்
0 comments:
Post a Comment