ஏ‌ப்ர‌ல் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28


1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நீண்ட நாளாக தடைபட்டு வந்த காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தாரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சோம்பல் நீங்கும்.



கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மகளுக்கு திருமணத்திற்காக வெளியில் கடனுதவியை நாடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். அவ்வப்போது வயிற்றுக்கோளாறு, தலைவலி, மூச்சுப்பிடிப்பு வந்து விலகும்.

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துப் போகப் பாருங்களேன். வழக்குகள் சாதகமாக அமையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 6, 12, 25, 27, 28, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment