3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அவ்வப்போது தூக்கமின்மை, பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும். அனைவராலும் மதிக்கப்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 5, 7, 15, 17, 21, 28
அதிர்ஷ்ட எண்கள் : 1, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி
0 comments:
Post a Comment