4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அவ்வப்போது வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அனுபவம் உள்ள நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். விடா முயற்சியால் வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 15, 16, 20, 24, 26
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், ரோஸ்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி
0 comments:
Post a Comment