Showing posts with label Nanban. Show all posts
Showing posts with label Nanban. Show all posts

Nalla Nanban Venbam Endru


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா


இறைவனே இறைவனே
இவனுயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா


இவன் எங்கள் ரோஜாச் செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் நொடி
அதை வேண்டினோம் மீண்டும் தா


உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபங்கள் பூக்கவில்லையா


இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்டபின்னும் உறக்கமா


வா நண்பா வா நண்பா
தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னைத் தாங்க வா




பாடியவர்: ராமகிருஷ்ணன், மூர்த்தி
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா. முத்துக்குமார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Irukkaannaa Iduppirukaana Illaiyaanaa


இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாணா இலியானா


உன் இடைதானா - இன்பக்
கடை தானா மெல் இடைதாண்டி
குடைதானா


அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாகத் தகடு
ஒன் ஒதட்டுக்குள் எத்தன ஒதடு
ஒன்னு குடு குடு


அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
ஒன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு


ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி


சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி


ஒருவாட்டி இடுப்பாட்டி
மலை எறக்க எறக்கத்துல தள்ளேன்!
இடங்காட்டி தடம்காட்டி
யென்ன அறக்க பறக்க வந்து கொல்லேன்


அடங்காட்டி மடங்காட்டி
வாய் ஒறைக்க ஒறைக்க முத்தம் வையேன்
படங்காட்டி பயங்காட்டி
நெஞ்சு எறைக்க எறைக்க தப்பு செய்யேன்


நான் சின்ன பையன்
நீ கண்ண வையேன்
நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வாழ வாயேன்


லயிச்சானா லயிச்சானா - இதழ்
லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சானா இனிச்சானா - வாய்
மடலில் கடல தினிச்சானா


கொழுக்கானா மொழுக்கானா - நல்லா
பழுத்துப் பழுத்து தளுக்கானா
இழைச்சானா கொழைச்சானா - ரொம்ப
செதுக்கி செதுக்கி ஒழைச்சானா


நீ செங்கிஸ்தானா
இனி ஒங்கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
ஒங் கையில் கஜகஸ்தானா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Heartiley Battery Charguthaan Always Well


heartile battery charge தான் all is well
தோல்விய tension-ah சொல்லிடு   
all is well


tight ஆகா lifey ஆனாலும் 
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம் 
  
canteen வடையிலே நூலை கண்டால்
all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்


மாச கடைசியில் kings um தீர்ந்தால்
all is well
துண்டு பிடி யில் நட்பை கோர்ப்போம்




heartile battery charge தான் all is well
தோல்விய tension-ah சொல்லிடு   
all is well 


canteen வடையிலே நூலை கண்டால்
all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்


மாச கடைசியில் kings um தீர்ந்தால்
all is well
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்


ஏலே வெல்ல சொக்கா 
கையில் என்ன booka 
educated look ah?
scene போடாதே 
ஹே மக்கா மக்கா 
மக்கா நிக்கும் மாக்க 
ஒத்த காலு கொக்க 
நீ mark-u கொத்தி நோகதே 


மூச்சு முட்டும் பாடமெல்லாம் 
சோடா கோலியா 
நீ load மேல load ஏத்த மூளை காளிய 
முளையதான் மூட்ட கட்டு 
follow your heart-u beat-u root-u


topper என்பதால் hero இல்லை 
all is well
topic மாறினால் அவனும் zero
topper-um
joker என்பதால் hero இல்லை 
all is well
சீட்டு கட்டிலே நீ தான் hero


heartile battery charge தான் all is well
தோல்விய tension-ah சொல்லிடு   
all is well


நீயும் கூட ப்ரம்ஹா 
table desk-ah drumma  மாத்தி குத்து கும்மா 
tune போடம்மா 
students என்ன யம்மா 
cell குள்ள sim-ah? பூட்டி வைக்கலாமா ?
நாம் escape ஆகி போவோமே 
bathroom தாபால் இல்லை என்றால் 
பாடு பாடேண்டா  
ஒரு tms-ah jesudaas-ah ஆவோம் வாயேண்ட 
முளையதான் மூட்ட கட்டு 
follow your heart-u beat-u route-u


hostel room குள் பாம்பு வந்தால் all is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு all is well
beer-u அடிச்சு தான் தொப்பை போட்டால் all is well
நீயும் ஆகலாம் police a2


canteen வடையிலே நூலை கண்டால் all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings um தீர்ந்தால் all is well
துண்டு பிடி யில் நட்பை கோர்ப்போம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்


தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்!
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்!
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எந்தன் கண் முன்னே

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!


யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!


இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்


கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - நண்பன்

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே 
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே 
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே 
அஸ்க் அஸ்க்…


அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொய்தேன் 
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் 
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே 
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே 
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே 


ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன் ! ஒ 


பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன் 
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க 


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே 
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே 
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே 


தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?


கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை 
Virus இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை 
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே 
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே 
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS