Kadal song lyrics - அன்பின் வாசலே பாடல் வரிகள்


நீ இல்லையேல்
நான் என் செய்வேன்?


அன்பின் வாசலே
அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவை
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்

நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ வான் மண் நீர் தீ...
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே

கண்ணீரைத் தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால்
பூப்பூத்திடாதோ

பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே

அன்பின் வாசலே
அன்பின் வாசலே

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment