மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடைய நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறைக்கூட இங்கிதமாகத்தான் எடுத்துச் சொல்வீர்கள். உங்களின் தன, பாக்யாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால்
தொட்டது துலங்கும். பணவரவு உண்டு. காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள இடத்திற்கு வீட்டை மாற்றுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சூரியன் 4ல் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் மனத்தாங்கல் வந்து போகும். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் செலவுகள் அதிகமாகும்.
உங்கள் ராசிநாதனான குருபகவான் 4ல் நிற்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். சரியான நேரத்தில் சாப்பிட முடியாததால் அசிடிட்டி, வயிற்றுவலி தொந்தரவுகள் வந்து நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பண வரவு உண்டு. திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள்.
அஷ்டமச்சனி நடைபெற்று கொண்டிருப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பணம் வாங்கித் தருவதிலும் குறுக்கே நிற்க வேண்டாம். ராகு 8ல் நிற்பதால் கணவன் மனைவி மற்றும் உறவினர்களால் சண்டை, சச்சரவுகள் வந்துபோகும். மாணவர்களே! சற்று போராடித்தான் பிடித்த பாடப்பிரிவில் இடம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரிகளே! முன்பின் அறியாதவர்களை நம்பி பெரிய அளவில் கடன் தர வேண்டாம்.
நழுவிச் சென்ற ஒப்பந்தம் மீண்டும் உங்களுக்கே கிடைக்கும். பிரச்னை கொடுத்த பங்குதாரர்கள் பிரிந்து செல்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். தொல்லை தந்த சக ஊழியர்கள் அமைதியாக இருப்பார்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனத்துடன் கைகோர்த்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளே! அரசால் சில சலுகைகள் கிடைக்கும். வளைந்து கொடுப்பதன் மூலம் வளர்ச்சி காணும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூன் 15, 16, 17, 23, 24, 25, 26, ஜூலை 2, 3, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 18 இரவு 10 மணி முதல் 19, 20 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சென்னை - மயிலாப்பூர் ஷீரடி சாய் பாபாவை தரிசியுங்கள். தந்தையிழந்த பிள்ளைகளின் படிப்புக்கு உதவுங்கள்.

0 comments:
Post a Comment