ஆனி மாத ராசி பலன்கள் - கும்பம்

புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள் தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவரிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம்  வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். விலகியிருந்த சொந்த பந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்ப்புகள் அடங்கும்.  பிள்ளை
பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுபநிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு  நல்ல நிறுவனத் தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதி புதன் ஆட்சி பெற்று நிற்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகனுடன் இருந்த இடைவெளி  விலகும். மனம் விட்டுப் பேசுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு அடைவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். 23ந் தேதி முதல்  சுக்கிரன் 6ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்துவலி வந்து நீங்கும். நகைகள்,  வாகனத்தை இரவல் தர வேண்டாம். சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்து செல்லும். ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்து விட்டீர்களா என்பதை  சரிபாருங்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.

செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர் ஆதரவாகப்  பேசுவார். முன்பணம் தந்து  முடிக்கப்படாமல் இருந்த வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்ய வழி கிடைக்கும். சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின்  ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். எடை மிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். கேது சாதகமாக இருப்பதால்  புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ரகசியங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.   உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதுப் பதவியை பெறுவீர்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி துறையைத் தேர்ந்தெடுத்து  படிப்பீர்கள்.கன்னிப் பெண் களே! காதல் கசக்கும். அடிக் கடி தலைவலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப்பற்றி குறை கூற வேண்டாம்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! புதியதாக நிலம் வாங்கி கிரயம் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும்.  நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும்  நேரமிது.

ராசியான தேதிகள்: ஜூன் 15, 21, 22, 23, 24, 25, 30, ஜூலை 1, 3, 5, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்:  ஜூன் 16, மாலை 4 மணி முதல் 17, 18, இரவு 10 மணி வரை மற்றும் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் இரவுப்  பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கோனேரிராஜபுரம் நடராஜரை தரிசித்து வாருங்கள். சிவாலயத்திற்கு சென்று உழவாரப் பணியை  மேற்கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment