ஜூலை மாத ராசி பலன்கள் - மீனம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது மிகவும் உன்னதமான நிலை. ராகு பகவானின் சஞ்சாரத்தால் தீய பலன்களும், கேது பகவானின் சஞ்சாரத்தால் நற்பலன்களும் விளையும். அதுபோல சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கண்ட சனியாக உலா
வருவதும் நல்லதல்ல. ஆனால், குருபகவான் இரண்டாமிடத்திலிருந்து நற்பலன்களைக் கொடுப்பதால், மற்ற கிரகங்களின் தீய பலன்கள் அடிபட்டுப் போய்விடும். இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி உங்களுக்கு இந்த மாதம் மனோபலம் மேலோங்கும். எந்த காரியத்தையும் , தைரியத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்து வெற்றியடைவீர்கள். முகத்தில் நல்ல பொலிவு ஏற்படும். அதிகாரமுள்ள பதவி சிலருக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் எற்படும். தொழில், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்படும். சொல்வாக்கு, செல்வாக்கு ,அந்தஸ்து, கௌரவம் கூடும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சகல விதத்திலும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் குடும்பத்தாருடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது. ஏனெனில், வீண் விவாதங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளைப்பற்றிய அச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால், சில நன்மைகள் கிடைக்கும். தோழர்கள் அபிவிருத்தி அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு எதிரிகளால் துக்கமும் மன பயமும் ஏற்படும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment