ஜூன் மாத ராசி பலன்கள் - துலாம்

நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் கொண்டவர்கள் நீங்கள். எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். தற்போதைய காலக் கட்டத்தில்  ராசியில் சனி, ராகு என இருக்கிறது. மனதில் பட்டதை பளிச்சென்று
சொல்வீர்கள். ராசியில் ஏழரைச்சனி இருந்தாலும் ராசியை குரு பார்ப்பதாலும்  முன்னேற்றப் பலன்கள் உண்டு. இதுவரை இருந்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிலிருப்பவர்கள் முன்னேற்றப்  பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் சருமம்  சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம்.

சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில்  தம்பதியரிடையே இருந்து வந்த பிரச்னைகள் சுமுகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக  உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களுக்குக் கிடைக்கும்.  மேலதிகாரிகளின் அனுசரணை இருந்து வரும்.

புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்புத் தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள்  சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. வழக்கு இழுத்தடிக்கும்.  அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வகுப்பறையில் வீண் விவாதங்கள் வேண்டாம்.

பரிகாரம்: தினமும் நவகிரங்களை வலம் வரவும். குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீகமலவாஸின்யை நம’ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை கூறவும். ராம நாம ஜெபமும் செய்யலாம்.

சிறப்பு பரிகாரம்: அறுகம்புல்லை வாங்கி உங்கள் கைகளால் மாலையாகக் கட்டி விநாயகருக்கு சாத்துங்கள். கோளறு பதிகம் சொல்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9 போன்ற தேதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சுக்கிரன், குரு, சந்திரன்; தேய்பிறை: சந்திரன், குரு, புதன்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment