எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் நீங்கள், எதையுமே ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னர்தான் செய்வீர்கள். ராசிநாதனான புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். தன குடும்பாதிபதியான
சுக்கிரனுடன் இருப்பதால் நல்ல முன்னேற்றங்களை தருவார். குறிப்பாக நல்ல பணப் புழக்கத்தையும் பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்னையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள்.
வக்ர சனி சாதகமற்ற பலன்களை கொடுத்தாலும் குருவின் பார்வை சனி மீது விழுவதால் நன்மையையே தரும். காரியத் தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் வதந்திகளை தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மாதத்தின் பிற்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம், மயக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். குருவின் பார்வை ருண ரோக ஸ்தானத்தில் விழுவதால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.
பரிகாரம்: புதன்தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீவாஸூதேவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: நார்த்தங்காய் சாறு எடுத்து அருகிலிருக்கும் அம்மனுக்கு அபிஷேகத்திற்குக் கொடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், குரு, சுக்கிரன்; தேய்பிறை: சூரியன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வெள்ளி..

0 comments:
Post a Comment