ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்றவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்களுக்கு பூமி மூலமும் வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சாரம்
செய்வது தடைப்பட்ட பணம் கைக்கு கிடைக்க வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இருப்பினும் குரு அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. குரு தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் போன்றவை உண்டாகும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது.
நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். வெளிநாட்டிற்குச் செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் இந்த மாதம் எதிலுமே மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ககாரரூபாயை நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம்: மல்லிகைப் பூவை உதிரியாக வாங்கி உங்கள் கைகளால் கட்டி விநாயகருக்கு சாத்தவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25 ஆகிய தேதிகளில் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சுக்கிரன், குரு; தேய்பிறை: சந்திரன், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன்..

0 comments:
Post a Comment