ஜூன் மாத ராசி பலன்கள் - மேஷம்

எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள். காரணமில்லாமல் யாரிடமும் சினம் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு  துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும்
மாதமாக அமையும். மாத தொடக்கத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 2ல்  சுக்கிரன் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நன்மைகளே நடக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க  வேண்டியிருக்கும். யாரிடமும் கோபம் வேண்டாம்.

குருவும் சுக்கிரனும் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வாகனம், மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். பெயர்ச்சி பெற்று  சஞ்சாரம் செய்யும் குருவுடன் களத்திராதிபதி சுக்கிரன் சேர்ந்திருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்.  பணவரத்து அதிகரிக்கும்.  குருவின் பார்வை  பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்-  மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தந்தை ஆதரவாக இருப்பார்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகு மூன்றாம் பார்வையாக பிள்ளைகள் ஸ்தானத்தைப்  பார்ப்பதால் பிள்ளைகளால் மனக்கவலை ஏற்படும். இந்த மாதம் பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும்  கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள். வாகனம் ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்றும் ஏனைய கிழமைகளில் செவ்வாய் ஹோரையிலும் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் விருபாக்ஷாயை நம’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம்: எலுமிச்சம் பழச் சாறு பிழிந்து பிரதோஷத்தன்று சிவனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 ஆகிய தேதிகளில் இரவு பயணத்தை தவிர்க்கவும்.  

அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், சந்திரன், குரு; தேய்பிறை: சூரியன், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு,  திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment