குருபலம் என்பது என்ன - உங்களுக்கு தெரியுமா?

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. ஜாதகத்தில்
ஒருவருக்கு குருபலம் வந்து விட்டதா? என்று பார்த்த பிறகே அவரது திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். 

குரு எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும். இதைத்தான் குரு பலம் என்கிறார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment