மே மாத ராசி பலன்கள் - கும்பம்


எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள் நீங்கள். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதே  நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள்
 கிடைக்கும். ராசிக்கு மூன்றில் செவ்வாயும் புதனும்  சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வதால் துணிச்சல்  உண்டாகும். ராசியாதிபதியான சனி ஒன்பதில் இருப்பதால் எதைப் பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். உத்யோகத்தில்  இருப்பவர்கள் எந்தவொரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது  நல்லது. பெண்கள்  துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மையைத் தரும்.  மாணவர்கள் விளையாடும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. 

சந்திராஷ்டமம்: 

20, 21 போன்ற தேதிகளில் பேச்சில் கவனம் தேவை. வீண் வம்புகள் வரும். 

அதிர்ஷ்ட நாட்கள்: 

6, 15, 16, 25. 

பரிகாரம்: 

சனிபகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட ஆரோக்யம் உண்டாகும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment