எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதிலுள்ள லாப நஷ்டங்களை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் மனக் குழப்பம் நீங்கி தெளிவான
முடிவு களை எடுப்பீர்கள். ராசிக்கு நான்கில் சஞ்சாரம் செய்யும் புதனும் செவ்வாயும் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் காரிய வெற்றியையும் தருவார்கள். ஆனால், மற்றவர்களிடம் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குழந்தைகளின் திறமையைக் கண்டு பாராட்டுவீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். யாரிடம் பேசும்போதும் நிதானமாகப் பேசுவது நன்மையைத் தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வித் தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்:
18, 19 போன்ற தேதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாட்கள்:
6, 15, 16, 25.
பரிகாரம்:
திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கி வர எல்லாப் பிரச்னைகளும் தீரும்.
0 comments:
Post a Comment