மே மாத ராசி பலன்கள் - தனுசு


தொலைநோக்குச் சிந்தனையும் எதைப் பற்றியும் கவலைப்படாமலும் செயலாற்றும் திறன் மிக்கவர்கள் நீங்கள். சூரியனின் சஞ்சாரத்தால் பகைகள் விலகும்.  பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சுக்கிரனின்
சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். தொழில், வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்களை கிடைக்கப் பெறுவீர்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.  நீண்டதூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். இனிமையான பேச்சு சாதூர்யத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு  உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதிலிருந்த குழப்பம்  நீங்கி தைரியம் ஏற்படும். 

சந்திராஷ்டமம்: 

15, 16, 17 போன்ற தினங்களில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள். 

அதிர்ஷ்ட நாட்கள்: 

3, 12, 21, 30. 

பரிகாரம்: 

மகான் ராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment